Wednesday 20 March 2013








இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி
தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஸியேசன் தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கனகராஜ், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் உலகாள்வோன் வரவேற்று பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணிய ஆதித்தன், இணைச் செயலாளர் செல்வம் கிறிஸ்டோபர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவடட செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராஜ், மக்கள் உரிமை பாதுகாப்பு குழு அமைப்பாளர் அதிசய குமார், மணித உரிமை பாதுகாப்பு கழக தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராமசந்திரன், மதிமுக நக்கீரன், வீராங்கணை அமைப்பின் தலைவி பேராசிரியை பாத்திமாபாபு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்ட இலங்கை மீது சுந்திரமான பண்ணாட்டு விசாரனைக்கு ஐ.நா. சபை உத்தரவிடவேண்டும். 

இலங்கையில் 60 ஆண்டு கால போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழர் பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர் மத்தியிலும் ஐ.நா. சபை  பொது சுதந்திரமான வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரமான வாழ்வுரிமைகளை உத்தரவாதப்படுத்து. சிறுவர்களை குறி வைத்து கடத்துவதையும், கொலை செய்வதையும் ஐ.நா. மேற்பார்வையில் விசாரனை மேற்கொண்டு இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் ஊடகத்தினரை படுகொலை செய்வதும், கடத்தப்படுவதும், ஊடகத்தினர் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐ.நா. மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும். 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றும், ஆயிரக்கக்கான மீனவர்களை சித்திரவதை செய்யும் இலங்கை அரசு மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேல், துணைச் செயலாளர் மாடசாமி, பொருளாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஸியேசன் செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Monday 11 February 2013

தனியார் மயமான தாமிரபரணி.. தவிக்கும் தூத்துக்குடி

தனியார் மயமான தாமிரபரணி.. தவிக்கும் தூத்துக்குடி
தேசிய நீர் கொள்கை என்று ஒன்றை உருவாக்கி தண்ணீரை தனியார்மயமாக்கிடமத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகின்றது. ஆனால், சட்டம் வருவதற்குமுன்பே தாமிரபரணி நதியை தனியார் மயமாக்கி நீர் கொள்ளை நடத்தி வருகின்றனர.அதிகாரிகள்தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் குறுக்கே மொத்தம் 8அணைக்கட்டுகள் உள்ளன. கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணை, ஆங்கிலேயர்ஆட்சிக் காலத்தில் 1853-இல் திட்டமிடப்பட்டு 1873-இல் கட்டிமுடிக்கப்பட்டதாகும்.இங்கிருந்து தென்கால் வாய்க்கால் மூலம் நேரடிப் பாசனமாக 2,693 ஏக்கர்நிலங்களும், குளத்துப் பாசனம் மூலம் 10,067 ஏக்கர் நிலங்களுமாக மொத்தம்12,760 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வடகால் மூலம் நேரடிப் பாசனமாக 3,289 ஏக்கர் நிலங்களும், குளத்துப்
பாசனமாக 9,511 ஏக்கர் நிலங்களுமாக மொத்தம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன
வசதி பெருகின்றன.ஆரம்பத்தில் 8 அடி தண்ணீர் தேக்கும் திறனுடன் கட்டப்பட்ட இந்த அணை,தொடர்ந்து தூர்வாரப்படாததால் படிப்படியாகக் கொள்ளளவு குறைந்து வந்தது.இப்போது ஒரு அடி கொள்ளளவு மட்டுமே கொண்டுள்ளது.இதற்கிடையே, வடகால் வாய்க்காலில் இருந்து தூத்துக்குடியில் உள்ளஸ்பிக், ஸ்டெர்லைட், அனல்மின் நிலையம் உள்ளிட்ட 9 தொழிற்சாலைகளுக்குதண்ணீர் எடுத்துச்செல்லப்பட்ட நிலை மாறி, அணையில் இருந்தே நேரடியாகராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டது. இதற்கு விவசாயிகள் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் எந்தத் தீர்வையும் எட்டமுடியவில்லை.ஸ்ரீவைகுண்டம் அணையை நம்பியிருக்கும் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களில்,தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஒருபோக சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது.சுமார் 150-க்கு மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் விநியோகத்திலும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்த் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, 1994-ம் ஆண்டுமுதல் கார் சாகுபடி
அனுமதிக்கப்படவில்லை. இதனால், நன்செய் நிலங்கள் ஒருபோகம் விளையும்நிலங்களாக மாறியுள்ளன.தற்போது பாபநாசம் அணையில் இருந்து 30 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறுஅணையில் இருந்து 350 கன அடி தண்ணீரும் எடுக்கப்படுகிறது. மருதூர்அணைக்கட்டுக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஸ்ரீவைகுண்டம்அணைக்கட்டுக்கு 50 கன அடி தண்ணீர் தான் வருகிறது. அணைக்கட்டுக்கு மேல்பகுதியில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் ராட்ஷச மோட்டார்கள் மூலம் தண்ணீர்எடுக்கப்படுவதால், அணைக்கட்டுக்கு தண்ணீர் வரவில்லை.ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டு 137 ஆண்டுகளாகியும், இதுவரைதூர்வாரப்படவில்லை. இப்போது அணைக்கட்டின் உள்ளேயே 3 ராட்சத குழாய்அமைத்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். 1000 லிட்டர் தண்ணீர்50 பைசா என்று பொதுப்பணித்துறையிடம் இருந்து குடிநீர் வடிகால் வாரியம்விலைக்கு வாங்குகின்றது. அதனை சுத்திகரிப்பு செய்து தனியார்தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் 15 ரூபாய் என்று
விற்கப்படுகின்றது. இப்படி ஒரு நாளைக்கு 20 மில்லியன் காலன் அதாவது 9கோடி லிட்டர் தண்ணீர் தனியார் தொழிற்சாலைகளுக்கு  விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. தினம் தினம் 9 கோடி லிட்டரும் தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்துவருகின்றனர். வெளியில் பாட்டிலில் விற்கும் தண்ணீர் 1 லிட்டர் 15 ரூபாய்.ஆனால், அரசாங்கம் இங்கு 1000 லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு விற்கின்றது.இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி வாங்கிய தண்ணீருக்கு 1975 முதல் 2011வரை 82 கோடி ரூபாயை கட்டாமல் குடிநீர் வடிகால் வாரியம் பாக்கிவைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். இதே போன்றுதிருநெல்வேலி மாவட்டத்தில் கோகோ கோலா தொழிற்சாலைக்காக சீவலப்பேரி ஆற்றில்இருந்து தினமும் 5 மில்லியன் காலன் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் நீருக்கான முன்னுரிமை என்பது விவசாயத்திலிருந்துதொழிற்சாலைக்கு என்று மாற்றப்பட்டிருக்கிறதை உறுதிப்படுத்துகின்றது.இதனால் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடுநீருக்கும் கடும் தட்டுப்பாடுநிலவுகின்றது.


தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 15 ரூபாய்.அதே தூத்துக்குடியில் ஒரு குடம் 10 ரூபாய், ஒரு கேன் 30 ரூபாய்அப்படியென்றால் பணம் இருந்தால்தான் தாகத்திற்கு கூட தண்ணீர் குடிக்கமுடியும். இப்படி தண்ணீரை தனியார் மயமாக்கி சுரண்டிக் கொழுக்கும்பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிக்கும் நாம் எதிர்காலத் தலைமுறையினருக்கு எதைவிட்டு வைக்கப் போகின்றோம்.
தேசிய நீர் கொள்கை என்று ஒன்றை உருவாக்கி தண்ணீரை தனியார்மயமாக்கிடமத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகின்றது. ஆனால், சட்டம் வருவதற்குமுன்பே தாமிரபரணி நதியை தனியார் மயமாக்கி நீர் கொள்ளை நடத்தி வருகின்றனர்அதிகாரிகள்.
தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் குறுக்கே மொத்தம் 8அணைக்கட்டுகள் உள்ளன. கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணை, ஆங்கிலேயர்ஆட்சிக் காலத்தில் 1853-இல் திட்டமிடப்பட்டு 1873-இல் கட்டிமுடிக்கப்பட்டதாகும்.
இங்கிருந்து தென்கால் வாய்க்கால் மூலம் நேரடிப் பாசனமாக 2,693 ஏக்கர்நிலங்களும், குளத்துப் பாசனம் மூலம் 10,067 ஏக்கர் நிலங்களுமாக மொத்தம்12,760 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வடகால் மூலம் நேரடிப் பாசனமாக 3,289 ஏக்கர் நிலங்களும், குளத்துப்பாசனமாக 9,511 ஏக்கர் நிலங்களுமாக மொத்தம் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெருகின்றன.
ஆரம்பத்தில் 8 அடி தண்ணீர் தேக்கும் திறனுடன் கட்டப்பட்ட இந்த அணை,தொடர்ந்து தூர்வாரப்படாததால் படிப்படியாகக் கொள்ளளவு குறைந்து வந்தது.இப்போது ஒரு அடி கொள்ளளவு மட்டுமே கொண்டுள்ளது.
இதற்கிடையே, வடகால் வாய்க்காலில் இருந்து தூத்துக்குடியில் உள்ளஸ்பிக், ஸ்டெர்லைட், அனல்மின் நிலையம் உள்ளிட்ட 9 தொழிற்சாலைகளுக்குதண்ணீர் எடுத்துச்செல்லப்பட்ட நிலை மாறி, அணையில் இருந்தே நேரடியாகராட்சத குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டது. இதற்கு விவசாயிகள் தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் எந்தத் தீர்வையும் எட்டமுடியவில்லை.
ஸ்ரீவைகுண்டம் அணையை நம்பியிருக்கும் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களில்,தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஒருபோக சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது.சுமார் 150-க்கு மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் விநியோகத்திலும் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
தண்ணீர்த் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, 1994-ம் ஆண்டுமுதல் கார் சாகுபடிஅனுமதிக்கப்படவில்லை. இதனால், நன்செய் நிலங்கள் ஒருபோகம் விளையும்நிலங்களாக மாறியுள்ளன.
தற்போது பாபநாசம் அணையில் இருந்து 30 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறுஅணையில் இருந்து 350 கன அடி தண்ணீரும் எடுக்கப்படுகிறது. மருதூர்அணைக்கட்டுக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஸ்ரீவைகுண்டம்அணைக்கட்டுக்கு 50 கன அடி தண்ணீர் தான் வருகிறது. அணைக்கட்டுக்கு மேல்பகுதியில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் ராட்ஷச மோட்டார்கள் மூலம் தண்ணீர்எடுக்கப்படுவதால், அணைக்கட்டுக்கு தண்ணீர் வரவில்லை.
ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டு 137 ஆண்டுகளாகியும், இதுவரைதூர்வாரப்படவில்லை. இப்போது அணைக்கட்டின் உள்ளேயே 3 ராட்சத குழாய்அமைத்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். 1000 லிட்டர் தண்ணீர்50 பைசா என்று பொதுப்பணித்துறையிடம் இருந்து குடிநீர் வடிகால் வாரியம்விலைக்கு வாங்குகின்றது. அதனை சுத்திகரிப்பு செய்து தனியார்தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் 15 ரூபாய் என்றுவிற்கப்படுகின்றது. இப்படி ஒரு நாளைக்கு 20 மில்லியன் காலன் அதாவது 9கோடி லிட்டர் தண்ணீர் தனியார் தொழிற்சாலைகளுக்கு  விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. தினம் தினம் 9 கோடி லிட்டரும் தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்துவருகின்றனர். வெளியில் பாட்டிலில் விற்கும் தண்ணீர் 1 லிட்டர் 15 ரூபாய்.ஆனால், அரசாங்கம் இங்கு 1000 லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு விற்கின்றது.இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி வாங்கிய தண்ணீருக்கு 1975 முதல் 2011வரை 82 கோடி ரூபாயை கட்டாமல் குடிநீர் வடிகால் வாரியம் பாக்கிவைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். இதே போன்றுதிருநெல்வேலி மாவட்டத்தில் கோகோ கோலா தொழிற்சாலைக்காக சீவலப்பேரி ஆற்றில்இருந்து தினமும் 5 மில்லியன் காலன் கொடுக்கப்பட்டு வருகின்றது.இந்த சம்பவம் நீருக்கான முன்னுரிமை என்பது விவசாயத்திலிருந்துதொழிற்சாலைக்கு என்று மாற்றப்பட்டிருக்கிறதை உறுதிப்படுத்துகின்றது.இதனால் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடுநீருக்கும் கடும் நிலவுகின்றது.தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 15 ரூபாய்.அதே தூத்துக்குடியில் ஒரு குடம் 10 ரூபாய், ஒரு கேன் 30 ரூபாய்அப்படியென்றால் பணம் இருந்தால்தான் தாகத்திற்கு கூட தண்ணீர் குடிக்கமுடியும். இப்படி தண்ணீரை தனியார் மயமாக்கி சுரண்டிக் கொழுக்கும்பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிக்கும் நாம் எதிர்காலத் தலைமுறையினருக்கு எதைவிட்டு வைக்கப் போகின்றோம்.